பேருந்துகள் மோதல்: 4 பயணிகள் காயம்
கோவையில் அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதியதில் 4 பயணிகள் காயமடைந்தனர்.
கோவையில் அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதியதில் 4 பயணிகள் காயமடைந்தனர்.
கண்ணம்பாளையத்தில் இருந்து டவுன்ஹால் நோக்கிச் சென்ற தனியார் பேருந்தும், ரயில் நிலையத்தில் இருந்து பேரூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும் கோவை டவுன்ஹால் மணிக்கூண்டு அருகே புதன்கிழமை சென்று கொண்டு இருந்தன.
அப்போது, டவுன்ஹால் பேருந்து நிறுத்தம் அருகே முன்னாள் சென்ற அரசுப் பேருந்து மீது தனியார் பேருந்து மோதியது. இதில் தனியார் பேருந்தின் முன்பக்கக் கண்ணாடி உடைந்தது.
இந்த விபத்தில் அரசுப் பேருந்தில் பின்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த செல்வபுரத்தைச் சேர்ந்த நாகமாணிக்கம் (32), பேரூரைச் சேர்ந்த முத்துசாமி (28) ஆகியோரும், தனியார் பேருந்தில் முன்பக்க இருக்க இருக்கையில் அமர்ந்திருந்த பள்ளபாளையத்தைச் சேர்ந்த ராமலிங்கம் (58), அவரது மனைவி அருக்காணி (55) ஆகியோர் காயமடைந்தனர்.
காயமடைந்த நான்கு பயணிகளும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பேருந்து மோதிய வேகத்தில் அதில் நின்று கொண்டு பயணம் செய்த பல பயணிகள் லேசான காயமடைந்தனர்.
இதுகுறித்து மேற்கு போக்குவரத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.