முகப்பு
கோயம்புத்தூர்

பாலாற்றங்கரை அனுமன் கோயிலில் வெள்ளப்பெருக்கு: பூஜைக்கு நடுவே பக்தர்கள் வெளியேற்றம்!

கோயிலுக்கு செல்லும் தரைமட்டப் பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால் பரபரப்பு.

Updated On : 14 ஆகஸ்ட் 2024, 1:10 pm IST
பாலாற்றங்கரை அனுமன் கோயில் - dinamani
பகிர்:

கோவை: பொள்ளாச்சி அடுத்த பாலாற்றங்கரை அனுமன் கோயிலில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், பூஜைக்கு நடுவே பக்தர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

பொள்ளாச்சி அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயில். ஆற்றின் மையப்பகுதியில் உள்ள கோவிலுக்கு இப்பகுதியில் உள்ள பக்தர்கள் அதிக அளவில் வருவது வழக்கம்.

இந்நிலையில் புதன்கிழமை காலை வழக்கம் போல நடை திறக்கப்பட்டு ஆஞ்சநேயருக்கு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்தனர்.

Advertisement

Advertisement

நேற்றிரவு ஆழியாறு வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்த நிலையில், பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலின் தரைமட்ட பாலம் வெள்ளத்தில் மூழ்கியது.

இதன் காரணமாக ஆஞ்சநேயர் கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் கோவிலில் இருந்து அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

பாலாற்றங்கரை அனுமன் கோயில் - dinamani

இதனைத் தொடர்ந்து, தற்காலிகமாக கோயிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments