சாவன் மாத திங்கள்: காசி விஸ்வநாதர் கோயிலில் குவிந்த பக்தர்கள்!
காசி விஸ்வநாதர் கோயிலில் சாவன் மாதத்தின் முதல் திங்கள்கிழமையில் லட்சக்கணக்கானோர் வழிபாடு செய்தது பற்றி..
உத்தரப் பிரதேசம், வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் சிராவண மாதத்தின் முதல் திங்கள்கிழமையான இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
சிராவண மாதம், சாவன் மாதம் என்றழைக்கப்படுகிறது. வடமாநிலங்களில் உள்ள அனைத்து சிவன் கோயில்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, 12 ஜோதிர்லிங்களில் ஒன்றாகக் கருதப்படும் காசி விஸ்வநாதர் கோயிலில் சிராவண மாதத்தின் முதல் திங்கள்கிழமையில் ஜலபிஷேகம் முக்கியமானது. கங்கையிலிருந்து புனித நீரெடுத்து, தங்களது ஊரில் உள்ள சிவன் கோயிலில் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வார்கள் பக்தர்கள்.
அதன் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் இன்று சிறப்பாக ஜலபிஷேகம் நடைபெற்றது.
கோயில் நிர்வாகத்தின் தகவலின்படி,
சிராவண மாதத்தின் முதல் திங்கள்கிழமையன்று வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. காலை 7 மணிக்குள் 2.25 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.
அதிகாலையில் மங்கள ஆர்த்திக்குப் பிறகு கோயில் நடை பக்தர்களுக்காகத் திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, பக்தர்கள் வரிசையில் நின்று 'ஜலபிஷேகம்' (நீரால் அபிஷேகம் செய்யும் சடங்கு) செய்து சிவபெருமானின் அருளைப் பெற்றனர்.
இந்நிகழ்வின்போது, கோயில் வளாகத்திற்கு வருகை தந்த 'கன்வாரியாக்கள்' (சிவபெருமானின் பக்தர்கள்), பிற பக்தர்களுக்கு மலர் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயில் தலைமை நிர்வாக அதிகாரி விஸ்வ பூஷன் மிஸ்ரா கூறுகையில்,
இன்று நாள் முழுவதும் சுமார் எட்டு லட்சம் பக்தர்கள் கோயிலுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மங்கள ஆரத்திக்குப் பிறகு கோயில் திறக்கப்பட்டதிலிருந்து பக்தர்களின் வருகை தடையின்றி நீடிக்கிறது. இரவு வரை தரிசனம் தொடரும் என்று அவர் கூறினார்.
உத்தரப் பிரதேசம் முழுவதும் உள்ள சிவன் கோயில்களில் அதிகளவிலான பக்தர்கள் கூடும் சிராவண மாதத்தின் முதல் திங்கள் கிழமையன்று, கூட்டத்தை நிர்வகிக்கவும் பக்தர்கள் தடையின்றிச் செல்லவும் அதிகாரிகள் விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.
Varanasi's Kashi Vishwanath temple sees over 2.25 lakh devotees by 7 am on first Shravan Monday Varanasi, Aug 3 (PTI) The first Monday of Shravan drew a massive rush of devotees to Varanasi's Shri Kashi Vishwanath Temple, with over 2.25 lakh pilgrims offering prayers by 7 am, according to temple authorities.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.