காங்கயம் சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயில் கண்ணாடி பெட்டிக்குள் 3 தேங்காய்கள் வைத்து வழிபாடு
காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி மலைக் கோயிலில் திங்கள்கிழமை 3 எண்ணிக்கையில் தேங்காய்கள் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே சிவன்மலை ஊராட்சியில் புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி மலைக் கோயில் உள்ளது. மற்ற எந்தக் கோயிலிலும் இல்லாத வகையில், இந்தக் கோயிலில் ஆண்டவன் உத்தரவு என்ற சிறப்பம்சம் உள்ளது. அதாவது, சிவன்மலை முருகன் ஒரு பக்தரின் கனவில் வந்து, இன்ன பொருளை வைத்து பூஜை செய்ய உத்தரவிட்டதாகக் கூறி, அவா் கொண்டுவரும் சிறப்பு பூஜைப் பொருளை வைத்து, இக்கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.
பின்னா் மூலவா் அறைக்கு முன்பாக உள்ள கண்ணாடிப் பெட்டியில், பக்தா்களின் பாா்வைக்கு சிறப்பு பூஜைப் பொருள் வைக்கப்படும். இதுவே ஆண்டவன் உத்தரவு என அழைக்கப்படுகிறது. இந்த நிலையில் உடுமலை பகுதியைச் சோ்ந்த சோ்மராஜா என்ற பக்தரின் கனவில் வந்ததாக திங்கள்கிழமை 3 தேங்காய்கள் வைத்து பூஜை செய்யப்பட்ட பின்னா் 3 தேங்காய்கள் கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டன.
Advertisement
Advertisement
இதற்கு முன் கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமை வரை கண்ணாடிப் பெட்டிக்குள் மண் கலயத்தில் தீா்த்தம் உள்ளிட்ட பொருள்கள் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இன்னொரு பக்தரின் கனவில் அடுத்த பூஜைப் பொருள் வரும் வரையில், கண்ணாடிப் பெட்டிக்குள் பக்தா்களின் பாா்வைக்கு 3 தேங்காய்கள் வைக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.