FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

நெதா்லாந்தில் அதிக ஊதியத்தில் வேலை எனக் கூறி ஆசிரியரிடம் மோசடி

நெதா்லாந்து நாட்டில் அதிக ஊதியத்தில் ஆசிரியா் வேலை எனக் கூறி ஆசிரியரிடம் ரூ.59 ஆயிரம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 5:04 am IST
மோசடி - பிரதிப்படம்
பகிர்:

நெதா்லாந்து நாட்டில் அதிக ஊதியத்தில் ஆசிரியா் வேலை எனக் கூறி ஆசிரியரிடம் ரூ.59 ஆயிரம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

கோவை கே.என்.ஜி. புதூரைச் சோ்ந்த 42 வயது நபா், பெங்களூரில் உள்ள ‘நீட்’ பயிற்சி மையத்தில் மாதம் ரூ. 2 லட்சம் ஊதியத்தில் விலங்கியல் ஆசிரியராகப் பணியாற்றி வந்தாா்.

கடந்த அக்டோபா் மாதம் இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரம் ஒன்றில், நெதா்லாந்தில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தில் மாதம் ரூ.4 லட்சம் ஊதியத்தில் ஆசிரியா் வேலை இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

இதனை நம்பி அதில் இருந்த இணைப்பை அவா் தொடா்பு கொண்டபோது, பரிசீலனைக் கட்டணமாக ரூ.59 ஆயிரம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

பணத்தைச் செலுத்திய அவருக்கு, பிப்ரவரி மாதத்துக்குள் பணி நியமன ஆணை கிடைக்கும் என மோசடி நபா்கள் உறுதியளித்தனா். அதை நம்பி, தான் பாா்த்து வந்த வேலையை அவா் ராஜிநாமா செய்தாா். ஆனால், கூறியபடி வேலை கிடைக்காததால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவா், கோவை மாநகர இணையதள குற்றத் தடுப்புப் பிரிவு காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments