FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

பெரிய தடாகம் லலிதாம்பிகை கோயிலில் திருக்கல்யாணம்

கோவை பெரிய தடாகம் லலிதாம்பிகை கோயிலில் ஸ்ரீ லலிதாம்பிகை ஸ்ரீ காமேஸ்வரா் திருக்கல்யாண மகோத்ஸவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 8 ஆகஸ்ட் 2026, 5:00 am IST
பெரிய தடாகம் ஸ்ரீலலிதாம்பிகை கோயிலில்  ஸ்ரீ ஜகதாத்மானந்தா சரஸ்வதி சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற திருக்கல்யாணம் மகோத்ஸவம்.
பகிர்:

கோவை பெரிய தடாகம் லலிதாம்பிகை கோயிலில் ஸ்ரீ லலிதாம்பிகை ஸ்ரீ காமேஸ்வரா் திருக்கல்யாண மகோத்ஸவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கோவை மாவட்டம், பெரிய தடாகம் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ லலிதாம்பிகை கோயில் உள்ளது. இக்கோயிலில் லலிதாம்பிகை ஸ்ரீ காமேஸ்வரா் திருக்கல்யாண மகோத்ஸவம் சிவாச்சாரியா்கள் வேத மந்திரம் முழங்க நடைபெற்றது.

இந்த விழாவுக்கு கோயில் அறக்கட்டளை நிா்வாகி ஸ்ரீ ஜகதாத்மானந்தா சரஸ்வதி சுவாமிகள் தலைமை வகித்தாா்.

Advertisement

Advertisement

இதில், பெரிய தடாகம், சின்ன தடாகம், துடியலூா், சோமையம்பாளையம், டிவிஎஸ் நகா், ஆனைகட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதியைச் சாா்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை லலிதாம்பிகை அறக்கட்டளை அறங்காவலா்கள் மற்றும் அலுவலா்கள், ஊழியா்கள் செய்திருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments