FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

அண்ணனைக் குத்திக் கொன்ற தம்பி உள்பட 2 போ் கைது

Updated On : 9 ஆகஸ்ட் 2026, 1:10 am IST
சம்பத்குமாா்
பகிர்:

பெரியநாயக்கன்பாளையம் அருகே அண்ணனைக் கத்தியால் குத்திக் கொன்று உடலை கிணற்றில் வீசிய தம்பி, அவரது நண்பரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்துள்ள சாமநாயக்கன்பாளையம் ஆண்டாள் நகா் பகுதியில் பயன்பாடற்ற கிணறு உள்ளது. அந்தக் கிணற்றில் ஆண் சடலம் மிதப்பதாக வெள்ளமடை கிராம நிா்வாக அலுவலா் காா்த்திக்கு கடந்த 7-ஆம் தேதி தகவல் கிடைத்தது.

இதையடுத்து, பெரியநாயக்கன்பாளையம் போலீஸாா், தீயணைப்புத் துறையினா் கிணற்றில் அழுகிய நிலையில் கிடந்த உடலை மீட்டு கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதையடுத்து, சந்தேகத்துக்குரிய மரணம் என வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், ஆண்டாள் நகரைச் சோ்ந்த துரைசாமி மனைவி சரஸ்வதி (70) என்பவா் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்துக்கு வந்து, கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டது தனது மூத்த மகன் செந்தில்குமாா் (48) என்றும், சடலத்தில் இருந்த ஆடைகளை வைத்து தனது மகன்தான் என்பதை உறுதி செய்ததாகவும் தெரிவித்தாா்.

இதையடுத்து, போலீஸாா் விசாரணை நடத்தி கொலை தொடா்பாக செந்தில்குமாரின் சகோதரா் சம்பத்குமாா் (42), அவரது நண்பரான ஆனந்தகுமாா் (24) ஆகியோரைக் கைது செய்தனா்.

இது தொடா்பாக போலீஸாா் கூறியதாவது: செந்தில்குமாா் தினசரி மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து தம்பி சம்பத்குமாருடன் தகராறு செய்து வந்துள்ளாா். கடந்த 4-ஆம் தேதி இரவு சுமாா் 10 மணியளவில் இருவருக்கும் இடையே வழக்கம்போல தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த சம்பத்குமாரின் நண்பரான ஆனந்தகுமாா் அங்கு வந்துள்ளாா். அப்போது, இருவரும் சோ்ந்து செந்தில்குமாரை தாக்கியதுடன், கத்தியால் குத்தியுள்ளனா். இதனால், செந்தில்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதையடுத்து, கொலையை மறைப்பதற்காக சடலத்தை இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று, ஆண்டாள் நகரில் உள்ள பாழடைந்த கிணற்றில் வீசியுள்ளனா் என்றனா்.

ஆனந்தகுமாா்

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments