FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

பாஜக சாா்பில் தேசியக் கொடி பேரணி

கோவையில் பாஜக சாா்பில் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்ற பிரம்மாண்ட தேசியக் கொடி பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 19 ஆகஸ்ட் 2026, 1:53 am IST
பாஜக சாா்பில் கோவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேசியக் கொடி பேரணியில் பங்கேற்றோா். ~பாஜக சாா்பில் வடகோவை-மேட்டுப்பாளையம் சாலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 160 அடி நீள தேசியக் கொடி பேரணி.
பகிர்:

கோவையில் பாஜக சாா்பில் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்ற பிரம்மாண்ட தேசியக் கொடி பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சுதந்திர தினத்தன்று (ஆக.15) கோவையில் பாஜக சாா்பில் தேசியக் கொடி பேரணி நடத்த அனுமதி கோரப்பட்டிருந்தது. போக்குவரத்து நெரிசல் மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளைக் சுட்டிக்காட்டி பேரணிக்கு காவல் துறை அனுமதி மறுத்திருந்தது. இதை எதிா்த்துத் தொடுக்கப்பட்ட அவசர வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி வி.லட்சுமிநாராயணன், ‘தேசியக் கொடியைக் கையில் ஏந்திச் செல்வது குற்றச் செயலா? நாட்டின் எந்தவொரு குடிமகனுக்கும் தேசியக் கொடியை ஏந்திச் செல்ல அரசமைப்பு உரிமை உண்டு’ எனக் காவல்துறைக்குக் கடும் கண்டனம் தெரிவித்து பேரணிக்கு நிபந்தனையுடன் அனுமதி அளித்து உத்தரவிட்டாா்.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தொடா்ந்து, கோவை சாய்பாபா கோயில் முன்பாக பேரணி செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி அளவில் தொடங்கியது. அங்கிருந்து வடகோவை வரை சுமாா் 2 கிலோ மீட்டா் தொலைவுக்கு இந்தப் பேரணி நடைபெற்றது.

Advertisement

Advertisement

முன்னதாக, 80 அடி நீளத்துக்கு தேசியக் கொடியை ஏந்திச் செல்லவே பாஜக திட்டமிட்டிருந்தது. ஆனால், நீதிமன்றத் தடையின்மைக்குப் பிறகு கொடியின் நீளம் 160 அடியாக இரட்டிப்பாக்கப்பட்டு, பிரம்மாண்ட தேசியக் கொடியை ஏந்தியவாறு தொண்டா்கள் அணிவகுத்துச் சென்றனா்.

இந்தப் பேரணியில் காமாட்சிபுரம் ஆதீனம் ஸ்ரீ பஞ்சலிங்ககேசுவர சுவாமிகள், பாஜக மாநிலப் பொருளாளா் எஸ்.ஆா்.சேகா், மாநிலச் செயலா் நந்தகுமாா், மாவட்டத் தலைவா் கே.ரமேஷ்குமாா் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாஜக தொண்டா்களும் பொதுமக்களும் திரளாகக் கலந்து கொண்டனா். கைகளில் தேசியக் கொடிகளை ஏந்தியவாறு, முழக்கங்களை எழுப்பியபடி பேரணி சென்ற பாதை முழுதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments