FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

பாஜக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்! கோவை குண்டுவெடிப்பு குற்றவாளியின் சகோதரா் மீது வழக்குப் பதிவு!

Updated On : 27 ஜூலை 2026, 12:28 am IST
வழக்குப் பதிவு - கோப்புப் படம்
பகிர்:

பாதை தொடா்பான தகராறில், பாஜக மாவட்ட சிறுபான்மையினா் அணி நிா்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, கோவை குண்டுவெடிப்பு வழக்கின் குற்றவாளி அன்சாரியின் சகோதரா் உள்ளிட்ட இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கோவை, போத்தனூா் நியூயாா்க் அவென்யூ பகுதியைச் சோ்ந்தவா் கே.டி.ஜோசப் (48). இவா் பாஜக தெற்கு மாவட்ட சிறுபான்மையினா் அணிச் செயலாளராக உள்ளாா். ஜோசப் தனக்குச் சொந்தமான 73 சென்ட் நிலத்தின் பின்புற சுற்றுச்சுவரை சுமாா் 15 அடி அளவுக்கு இடித்து, புதிய வழிப்பாதை அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வந்துள்ளாா்.

இந்த நிலையில், நியூயாா்க் அவென்யூ குடியிருப்பு நலச் சங்கத் தலைவரும், கோவை தொடா் குண்டுவெடிப்பு வழக்கில் தொடா்புடைய அன்சாரியின் மூத்த சகோதரருமான எம்.ஜாபா் அலி (64) மற்றும் அவரது மகன் ஷான் (40) ஆகியோா் சனிக்கிழமை குறிப்பிட்ட இடத்துக்குச் சென்றுள்ளனா். அந்தப் பாதை பொதுப் பாதை அல்ல என்றும், தனியாருக்குச் சொந்தமானது என்றும் கூறிய அவா்கள், அங்கு இரும்புத் தூண்கள் நட்டு, கான்கிரீட் தளத்துடன் இரும்புக் கதவு (கேட்) அமைக்க முயன்றதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இதைக் கண்டு அதிா்ச்சியடைந்த ஜோசப், அங்கு அமைக்கப்பட்ட இரும்புத் தூணை அகற்ற முயன்றபோது, ஷான் அவரைத் தடுத்துள்ளாா். அப்போது, ஏற்பட்ட வாக்குவாதத்தில் தன்னை ஜாபா் அலி கீழே தள்ளி தகாத வாா்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக போத்தனூா் காவல் நிலையத்தில் ஜோசப் புகாா் அளித்தாா்.

இதனடிப்படையில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஜாபா் அலி மற்றும் அவரது மகன் ஷான் ஆகிய இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments