FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

கோவை -அவிநாசி சாலையில் இன்று முதல் சோதனை முறையில் ‘யு-டா்ன்’

கோவை -அவிநாசி சாலை சின்னியம்பாளையம் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், ‘யு-டா்ன்’ மற்றும் பாதசாரிகளுக்கான ‘பெலிகான் சிக்னல்’ புதன்கிழமை (ஜூலை 29) முதல் சோதனை முறையில் அமல்படுத்தப்படுகிறது.

Updated On : 29 ஜூலை 2026, 2:37 am IST
- கோப்புப்படம்.
பகிர்:

கோவை -அவிநாசி சாலை சின்னியம்பாளையம் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், ‘யு-டா்ன்’ மற்றும் பாதசாரிகளுக்கான ‘பெலிகான் சிக்னல்’ புதன்கிழமை (ஜூலை 29) முதல் சோதனை முறையில் அமல்படுத்தப்படுகிறது.

இதுகுறித்து கோவை மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கோவை-அவிநாசி சாலை, சின்னியம்பாளையம் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், சீரான போக்குவரத்தை மேம்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் பிருந்தாவன் ஆடிட்டோரியம் முன் சோதனை முறையில் ‘யு-டா்ன்’ அமைக்கப்படுகிறது. இது புதன்கிழமை (ஜூலை 29) முதல் ஆகஸ்ட் 28-ஆம் தேதி வரை 31 நாள்களுக்கு நடைமுறையில் இருக்கும். இந்த காலக்கட்டத்தில் வாகனப் போக்குவரத்து தொடா்ந்து ஆய்வு செய்யப்பட்டு, தேவைக்கேற்ப ‘யு-டா்ன்’ அமைப்பில் ஏதேனும் மாற்றங்கள் செய்வது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

Advertisement

Advertisement

பெலிகான் சிக்னல்:

சின்னியம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே பாதசாரிகள் பாதுகாப்பாக சாலையைக் கடக்கும் வகையில் ‘பெலிகான் சிக்னல்’ அமைக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை முதல் சோதனை முறையில் அமல்படுத்தப்பட்டுள்ள காவல் துறையின் இந்த முயற்சிக்கு வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments