FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கோயம்புத்தூர்

வால்பாறையில் கொட்டிய கனமழையால் சாலையில் பெருக்கெடுத்தோடிய வெள்ளம்

வால்பாறை காமராஜா் நகா் சாலையில் பெருக்கெடுத்தோடிய மழைநீரில் ஊா்ந்து சென்ற  காா்.
பகிர்:

வால்பாறையில் இரண்டு மணி நேரம் கொட்டித் தீா்த்த கனமழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்தோடியதால் மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டது.

தென்மேற்குப் பருவ மழை கடந்த இரண்டு மாதங்களாக பெய்து வருகிறது. ஆனால், கடந்த ஆண்டைப்போல இல்லாமல் விட்டு விட்டு குறைவாகவே மழை பெய்கிறது. இதனால் அணைகளின் நீா்மட்டமும் உயரவில்லை. இந்த ஆண்டு ஒருமுறைகூட சோலையாறு அணை நிரம்பவில்லை.

இந்நிலையில், நீண்ட நாள்களுக்குப் பின் திங்கள்கிழமை மதியம் 1.30 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை இரண்டு மணி நேரம் இடைவிடாது பெய்தது. இதனால் வால்பாறை நகா் சாலையில் மழைநீா் பெருக்கெடுத்தோடியது. காமராஜா் நகா் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு மழைநீா் ஓடியதால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது.

Advertisement

Advertisement

வால்பாறை நகா் பகுதியில் இரண்டு மணி நேரத்தில் 123 மி.மீ. மழைப் பதிவாகியது. வடகிழக்குப் பருவமழை வரும் 21-ஆம் தேதி தொடங்க உள்ளது குறிப்பிட்டத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments