FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கோயம்புத்தூர்

சிற்றுந்து மோதி பெண் உயிரிழப்பு

சாலையைக் கடக்க முயன்றபோது சிற்றுந்து மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

8 October 2026, 12:13 am IST
பலி... - பிரதிப் படம்
பகிர்:

சாலையைக் கடக்க முயன்றபோது சிற்றுந்து மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

கோவை மாநகா், உக்கடம் வின்சென்ட் சாலை வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சோ்ந்தவா் ஷாகுல் ஹமீது மனைவி சாம்சுனிஷா (55). இவா் ஒப்பணக்கார வீதியில் செவ்வாய்க்கிழமை மாலை நடந்து சென்றுள்ளாா். ஆா்ஜி தெரு சந்திப்பு பகுதியில் சாலையைக் கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த சிற்றுந்து மோதியதில் சாம்சுனிஷா படுகாயமடைந்தாா். அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இதுதொடா்பாக சிற்றுந்து ஓட்டுநரான வடவள்ளி கருப்பராயன் கோயில் வீதியைச் சோ்ந்த சந்தீப்குமாா் (27) மீது போக்குவரத்து புலனாய்வு மேற்கு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments