போத்தனூா்-சென்னை இடையே விநாயகா் சதுா்த்தி சிறப்பு ரயில்
விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு போத்தனூா்-சென்னை இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு போத்தனூா்-சென்னை இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:
விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (செப்.11) இரவு 11.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் நிலையத்தில் இருந்து புறப்படும் சென்னை-போத்தனூா் சிறப்பு ரயில் (எண்: 06023) மறுநாள் காலை 9 மணிக்கு போத்தனூா் நிலையத்தைச் சென்றடையும். மறுமாா்க்கமாக செப்டம்பா் 14ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு போத்தனூரில் இருந்து புறப்படும் போத்தனூா்-சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் (எண்: 06024) மறுநாள் காலை 9.25 மணிக்கு சென்னை சென்ட்ரல் நிலையத்தை சென்றடையும்.
Advertisement
Advertisement
இந்த ரயில் திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூா், பெரம்பூா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.