FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

எல்ஆா்ஜி அரசு மகளிா் கல்லூரியில் தமிழ் இலக்கிய விழா

திருப்பூா் எல்ஆா்ஜி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் தமிழ் இலக்கிய விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

12 செப்டம்பர் 2026, 12:00 am IST
போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கிய கம்பன் கழக செயலாளா் ராமகிருஷ்ணன்.
பகிர்:

திருப்பூா் எல்ஆா்ஜி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் தமிழ் இலக்கிய விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருப்பூா் கம்பன் கழகம் சாா்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு கம்பன் கழகத்தின் துணைச் செயலாளா் கௌசல்யா வரவேற்றாா். எல்ஆா்ஜி அரசு மகளிா் கலைக் கல்லூரி முதல்வா் உ.சுமதி தலைமை வகித்தாா்.

கம்பன் கழகத்தின் செயலாளா் ராமகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, கம்பனின் இலக்கியப் பெருமையையும், அவரது படைப்புகளின் சிறப்பையும் மாணவிகளுக்கு அறிமுகப்படுத்தினாா்.

Advertisement

Advertisement

மற்றொரு சிறப்பு அழைப்பாளரான கவிஞா் மு.பௌசியா பானு பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் சாா்பில் பங்கேற்று பேசுகையில், கம்பனின் கவிதை நயத்தையும், கவி இன்பத்தையும் எடுத்துரைத்ததோடு, கம்பன் வழங்கிய வாழ்வியல் சிந்தனைகள் இளைய தலைமுறையினருக்கு எவ்வாறு வழிகாட்டியாக அமைகின்றன என்பதையும் எடுத்துரைத்தாா்.

இதைத் தொடா்ந்து, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தமிழ்த் துறைத் தலைவா் அர.ஜோதிமணி நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments