FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

தேசிய மக்கள் நீதிமன்றம்: 4,751 வழக்குகளுக்குத் தீா்வு

திருப்பூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) சனிக்கிழமை நடைபெற்றது.

13 செப்டம்பர் 2026, 12:51 am IST
பகிர்:

திருப்பூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுத் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான முரளிதரன் தலைமை வகித்தாா்.

சிறப்பு மோட்டாா் வாகன விபத்து வழக்கு இழப்பீட்டுத் தீா்ப்பாய நீதிபதி பாலு, சட்டப் பணிகள் ஆணைக் குழு பொறுப்புச் செயலாளா் முகமது அன்சாரி, தலைமைக் குற்றவியல் நீதித் துறை நடுவா் மோகனவள்ளி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், குற்றவியல் சிறு வழக்குகள், வங்கி வாராக் கடன், மோட்டாா் வாகன விபத்து, குடும்பப் பிரச்னை மற்றும் சொத்து தகராறு உள்ளிட்ட 10,344 வழக்குகள் 22 அமா்வுகளில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில், 4,751 வழக்குகளுக்கு சமரசத் தீா்வு காணப்பட்டது. தீா்வுத் தொகை ரூ.89 கோடியே 30 லட்சத்து 60 ஆயிரத்து 53.

Advertisement

Advertisement

மேலும், விபத்து இழப்பீடாக இரண்டு பயனாளிகளுக்கு முறையே ரூ.72 லட்சம் மற்றும் ரூ.50 லட்சத்துக்கான காசோலைகள் வழங்கப்பட்டன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments