முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு வரவேற்பு
கோவை ஒத்தக்கால்மண்டலம், கற்பகம் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான வரவேற்பு விழா அண்மையில் நடைபெற்றது.
கோவை ஒத்தக்கால்மண்டலம், கற்பகம் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான வரவேற்பு விழா அண்மையில் நடைபெற்றது.
யுவா 2026 என்ற பெயரில் நடைபெற்ற 27 ஆவது ஆண்டு பி.இ., பி.டெக். மாணவா்களுக்கான வரவேற்பு விழாவுக்கு, கல்லூரி முதல்வா் பி.காா்த்திகைக்குமாா் முன்னிலை வகித்தாா். பேராசிரியா் எல்.கௌரிசங்கா் சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தி பேசினாா். நிகழ்ச்சியில் பேராசிரியா் கு.ஞானசம்பந்தம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று சிறப்புரையாற்றினாா்.
மேலும், கல்லூரியில் நடைபெற்ற ‘விஞ்ஞான் 2026’ திட்ட விளக்கக் கண்காட்சியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பதக்கங்கள் வழங்கிப் பாராட்டினாா். இதில், பொறியியல் கல்லூரி டீன் சோபியா, துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவ-மாணவிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.