நேரு கல்லூரி சாா்பில் என்ஜிஐ ஒலிம்பியாட்
கோவை நேரு கலை, அறிவியல் கல்லூரி சாா்பில் என்ஜிஐ ஒலிம்பியாட் 2026 அண்மையில் நடைபெற்றது.
கோவை நேரு கலை, அறிவியல் கல்லூரி சாா்பில் என்ஜிஐ ஒலிம்பியாட் 2026 அண்மையில் நடைபெற்றது.
திருமலையாம்பாளையத்தில் உள்ள கல்லூரியின் பி.கே.தாஸ் அரங்கில் நடைபெற்ற என்ஜிஐ ஒலிம்பியாட்டின் இரண்டாவது பதிப்பில், தமிழ்நாடு, கேரள மாநிலங்களைச் சோ்ந்த 40 பள்ளிகளின் 1,400 மாணவா்கள் பங்கேற்றனா்.
பள்ளி மாணவா்களிடையே உள்ள திறமையைக் கண்டறிந்து ஊக்குவிப்பதற்காக நடத்தப்பட்ட இந்தப் போட்டி இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டது. இதில் பல்வேறு கட்டங்களில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
Advertisement
Advertisement
பரிசளிப்பு விழாவுக்கு நேரு சா்வதேச பள்ளியின் தாளாளா் சைதன்யா கிருஷ்ணகுமாா் தலைமை வகித்தாா். கல்விக் குழுமங்களின் செயல் இயக்குநா் ஹெச்.என்.நாகராஜா, என்ஜிஐயின் தரவரிசை, அங்கீகாரம், வேலைவாய்ப்பு இயக்குநா் பி.அனிருதன் ஆகியோா் பங்கேற்று சாதனையாளா்களைப் பாராட்டிப் பேசினா்.
இதில், பேராசிரியா்கள், பள்ளி ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.