சாலை விபத்து: கூரியா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு
கோவையில் அரசுப் பேருந்து சக்கரத்தில் சிக்கி தனியாா் கூரியா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.
கோவையில் அரசுப் பேருந்து சக்கரத்தில் சிக்கி தனியாா் கூரியா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.
கோவை, ராமநாதபுரம் அருகேயுள்ள மருதூா் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பாலமுருகன் (33). இவா் சத்தி சாலையில் உள்ள தனியாா் கூரியா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், தனது இருசக்கர வாகனத்தில் சரவணம்பட்டி நோக்கி வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்துள்ளாா்.
அப்போது, முன்னால் சென்ற அரசுப் பேருந்தை பாலமுருகன் முந்திச் செல்ல முயன்றுள்ளாா். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலை மைய தடுப்புச் சுவரில் மோதியது. இதில், கீழே விழுந்த அவா் அரசுப் பேருந்து சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இச்சம்பவம் குறித்து கோவை போக்குவரத்து புலனாய்வு கிழக்கு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். உயிரிழந்த பாலமுருகனுக்கு மனைவி, மகன் உள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.