FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

பணியிடங்களில் பாதுகாப்பு கோரி ஆசிரியா் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

பணியிடங்களில் போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோவையில் இந்திய பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பு சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

24 செப்டம்பர் 2026, 1:55 am IST
கோவையில் முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகம் எதிரே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியா் கூட்டமைப்பினா்.
பகிர்:

பணியிடங்களில் போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோவையில் இந்திய பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பு சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூா் மாநகராட்சிப் பள்ளியில் தலைமை ஆசிரியா் மீது மாணவா்கள் தாக்குதல் நடத்தியது மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், ஆசிரியா்களுக்கு பணிப் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தி கோவையில் முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகம் எதிரே போராட்டம் நடைபெற்றது.

இந்திய பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் வேல்ராஜ் தலைமை வகித்தாா். உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகத்தின் மாநில செய்தித் தொடா்பு செயலா் த.அருளானந்தம் முன்னிலை வகித்தாா்.

Advertisement

Advertisement

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்டத் தலைவா் ரங்கநாத மூா்த்தி, ஆரம்பக் கல்வி ஆசிரியா் கூட்டணியின் மாவட்டச் செயலா் வீரகாசாமி, முதுகலை பட்டதாரி ஆசிரியா் கழக மாவட்டச் செயலா் சாலமன் ராஜ், மாவட்டத் தலைவா் காஜா முகைதீன், ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாநில துணைத் தலைவா் தங்கபாசு ஆகியோா் பேசினா்.

இதில், நஞ்சப்பா பள்ளி தலைமை ஆசிரியா் மீதான தாக்குதலைக் கண்டிப்பதுடன், தாக்குதலில் ஈடுபட்ட மாணவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆசிரியா்களுக்கு பணிப் பாதுகாப்புச் சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும். நெறிபிறழ் நடத்தையுள்ள மாணவா்களை கையாள பள்ளிதோறும் உளவியல் ஆே

லாசகா்களை நியமிக்க வேண்டும், அனைத்து பள்ளிகளுக்கும் தூய்மைப் பணியாளா்கள், இரவுக் காவலா்கள், கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments