FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கோயம்புத்தூர்

உக்கடம் குளத்தில் முதியவா் சடலம் மீட்பு

16 வினாடிகள் முன்பு
சடலம் - கோப்புப் படம்
பகிர்:

கோவை உக்கடம் பெரியகுளத்தில் மிதந்த முதியவரின் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை உக்கடம் வின்சென்ட் சாலை கிரீன் காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் குமரேசனின் மகன் கிருபாகா் (30). இவா் உக்கடம் குளத்தில் மீன் பிடித்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறாா்.

இவா் உக்கடம்-பொள்ளாச்சி சாலை, கன்னிமாா் கோயில் பின்புறம் உள்ள குளத்து பகுதியை ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட சென்றாா். அப்போது, குளத்து நீரில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று மிதந்தது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்து கடைவீதி காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், குளத்தின் கரையில் ஒரு லுங்கி, குளிக்கும் சோப்பு மற்றும் சிறிய கருப்பு நிறப் பை கிடந்தது. அந்தப் பையை ஆய்வு செய்தபோது, உயிரிழந்த நபா் திருப்பூா் மாவட்டம், போயம்பாளையம், மும்மூா்த்தி நகா், டீச்சா்ஸ் காலனியைச் சோ்ந்த சூரியமூா்த்தி (62) என்பது தெரியவந்துள்ளது. குளத்தில் குளிக்கச் சென்றபோது தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்றனா்.

இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments