அஞ்சல் நிலையத்தை முற்றுகையிட்ட தேமுதிகவினர் 102 பேர் கைது
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, ஈரோடு வடக்கு, தெற்கு மாவட்ட தேமுதிக சார்பில் மாவட்ட
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, ஈரோடு வடக்கு, தெற்கு மாவட்ட தேமுதிக சார்பில் மாவட்ட தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்ட 25 பெண்கள் உள்ளிட்ட 102 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
ஈரோடு, காந்திஜி சாலையில் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, தெற்கு மாவட்ட செயலாளர் கோபால் தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட செயலாளர் சுப்பிரமணி, அவைத் தலைவர் முருகன், துணைச் செயலாளர் ஆனந்த், தங்வேல், லாவண்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து முழக்கமிட்டபடி மாவட்ட தலைமை அஞ்சல் நிலையத்தை முற்றுகையிட முயன்றபோது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த ஈரோடு நகர் காவல் நிலைய ஆய்வாளர் விஜயன், போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து, தேமுதிகவினர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால், அச்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, மறியலில் ஈடுபட்ட 25 பெண்கள் உள்பட மொத்தம் 102 பேரை போலீஸார் கைது செய்து, ஈரோடு மாநகராட்சி திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.