FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஈரோடு, நீலகிரி மாவட்டத்துக்கு விநாயகர் சிலைகள் அனுப்பிவைப்பு

சத்தியமங்கலத்தை அடுத்த பெரியகள்ளிப்பட்டியில் மாசு இல்லாத, நீரில் எளிதில் கரையக்கூடிய பொருள்களால்

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

சத்தியமங்கலத்தை அடுத்த பெரியகள்ளிப்பட்டியில் மாசு இல்லாத, நீரில் எளிதில் கரையக்கூடிய பொருள்களால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள், ஈரோடு, நீலகிரி மாவட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.    
 விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ஈரோடு, நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்கள், இந்து முன்னணி சார்பில் கிராமந்தோறும் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு, பூஜைகள் நடத்தி அதன் பிறகு ஊர்வலமாக எடுத்துச் சென்று ஆற்றில் கரைக்கப்படுவது வழக்கம்.
 சத்தியமங்கலத்தை அடுத்த பெரியகள்ளிப்பட்டியில் சுகாதாரகேடு ஏற்படாத வகையில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. காகிதக்கூழ், மண், எளிதில் கரையக் கூடிய பொருள்களால் 2 அடி முதல் 11 அடி வரை சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இங்கிருந்து, நீலகிரி, ஈரோடு மாவட்டத்துக்குத் தேவையான 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு அந்தந்த ஊர்களுக்கு வேன் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
 பஞ்சமுக விநாயகர், ராமருடன் விநாயகர், எலி விநாயகர், லிங்கத்தை தோளில் தூக்கியபடி பாகுபலி விநாயகர் என பல்வேறு விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. விற்பனைக்குத் தயாரான சிலைகளை இந்து முன்னணியைச் சேர்ந்த தொண்டர்கள் வேனில் ஏற்றிச் சென்றனர்.
 சத்தியமங்கலம் வட்டாரத்தில் 275 பேர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்த காவல் துறையினரிடம் அனுமதி கேட்டுள்ளனர். விநாயகர் சிலை வைக்க ஆட்சேபனை இல்லா கடிதம் கேட்கப்பட்டுள்ளதால் விநாயகர் சிலை வைப்பதில் சிக்கல் உள்ளதாக இந்து முன்னணி தொண்டர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments