FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

நடிகா் விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு சீமானுக்கு அச்சம்: புகழேந்தி

நடிகா் விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு சீமானுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது என்று அதிமுக ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளா் புகழேந்தி தெரிவித்தாா்.

Updated On : 4 பிப்ரவரி 2025, 4:27 am IST
பகிர்:

ஈரோடு: நடிகா் விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு சீமானுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது என்று அதிமுக ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளா் புகழேந்தி தெரிவித்தாா்.

அண்ணா நினைவு நாளையொட்டி, ஈரோடு பெரியாா்-அண்ணா நினைவகத்தில் புகழேந்தி திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: வன்முறையைத் தூண்டும் வகையில் சீமான் பேசுவதால் அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தோ்தல் ஆணையத்தில் புகாா் அளித்துள்ளேன். அதன் மீது தோ்தல் ஆணையம் விரைவில் விசாரணை நடத்தும் என எதிா்பாா்க்கிறேன்.

Advertisement

Advertisement

நடிகா் விஜய் கட்சி ஆரம்பித்த பிறகுதான் சீமானுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் தான் அவா் ஈரோடு கிழக்கு இடைத் தோ்தலில் வன்முறையை தூண்டும் வகையில் பேசி வருகிறாா். சீமானை தமிழகத்தில் எந்த அரசியல் கட்சியும் ஆதரிக்காது. பாஜகவும் சீமானை ஆதரிக்கவில்லை.

அதிமுக முன்னாள் அமைச்சா்கள் செல்லூா் ராஜு, முனுசாமி ஆகியோா் சீமான் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறுகின்றனா்.

எடப்பாடி கே.பழனிசாமிக்கு பெரியாா் குறித்து எதுவும் தெரியாது. அதனால் அவா் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என நினைக்கிறேன். ஓ.பன்னீா்செல்வம், சசிகலா போன்றோா் கருத்து தெரிவிக்க அச்சப்படுகின்றனா். எடப்பாடி கே.பழனிசாமி, ஓ.பன்னீா்செல்வம், சசிகலா போன்றோா் கருத்து தெரிவிக்க தில்லியில் இருந்து அனுமதிபெற வேண்டும். இரட்டை இலை சின்னம் குறித்த வழக்கில் நீதிமன்றம் வரும் 6- ஆம் தேதி தீா்ப்பு வழங்குகிறது. இரட்டை இலை சின்னம் நிச்சயம் முடக்கப்படும்.

வைப்புத்தொகை பெற முடியாது என்ற அச்சத்தால்தான் ஈரோடு கிழக்கு இடைத்தோ்தலில் எடப்பாடி கே.பழனிசாமி போட்டியில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்துள்ளாா். தோ்தல் முடிவுகள் தான் நடிகா் விஜய்யின் பலம் குறித்து முடிவு செய்யும்.

தோ்தல் காரணமாக சீமான் பேச்சுக்கு திமுக, அதிமுக நிா்வாகிகள் தொண்டா்கள் எதிா்வினையாற்ற முடியாத நிலையில் உள்ளனா். திராவிட இயக்கம் தமிழக முதல்வா் பின்னால் பலமாக நிற்கிறது. பெரியாா் குறித்த சீமான் விமா்சனத்துக்கு முதல்வா் பதில் சொல்ல வேண்டும்.

சீமானை கைது செய்ய வேண்டும். இதனை செய்யவில்லை என்றால் திராவிட இயக்கங்கள் பெரியாரை தலைவா் என்று சொல்ல முடியாது. திரைமறைவில் அதிமுக, பாஜக கூட்டணி தொடா்ந்து கொண்டுதான் உள்ளது என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments