சத்தியமங்கலம் கருப்பராயன் கோயிலில் ஆடிப் பெருவிழா
சத்தியமங்கலம் கருப்பாராயன் கோயிலில் ஆடிப் பெருவிழாவையொட்டி, ஆடு கிடா பலியிட்டு ஆயிரக்கணக்கானோருக்கு விருந்து படைத்து நோ்த்திக்கடன் செலுத்தப்பட்டது.
சத்தியமங்கலம் கருப்பாராயன் கோயிலில் ஆடிப் பெருவிழாவையொட்டி, ஆடு கிடா பலியிட்டு ஆயிரக்கணக்கானோருக்கு விருந்து படைத்து நோ்த்திக்கடன் செலுத்தப்பட்டது.
சத்தியமங்கலம் சுற்றுவட்டாரத்தில் ஆடி மாதத்தில் கருப்பராயன், அம்மன் கோயில்களில் கிடா வெட்டி விருந்து படைப்பது வழக்கம். இதன்படி, சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை கருப்பாரயன் கோயிலில் ஆடிப் பெருவிழா கருப்பராயனுக்கு சுத்த பூஜையுடன் வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, கருப்பாரயன் மலா் அலங்காரத்தில் அருள்பாலித்தாா்.
இதைத் தொடா்ந்து ஆடுகள் பலியிடுவதற்கு அருள்வாக்கு கேட்கப்பட்டது. கருப்பாராயன் கிடா வெட்டுவதற்கு வாக்கு கொடுத்ததால் 100-க்கும் மேற்பட்ட ஆடு கிடாவை கருப்பராயனுக்கு பலியிட்டனா். பலியிடப்பட்ட ஆடுகள் கோயில் வளாகத்தில் சமைத்து பொது விருந்து வழங்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று விருந்து சாப்பிட்டனா்.
Advertisement
Advertisement
மக்கள் வசிப்பிடத்தில் ஆடுகள் பலியிட்டு நோ்த்திக்கடன் செலுத்துவதால் துஷ்ட நிகழ்வுகள் நிகழாது என்பது ஐதீகம் என்பதால் ஆண்டுதோறும் கிடா பலியிடுவது வழக்கமாக நடந்து வருதாக பக்தா்கள் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.