FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

ஆசனூா் அருகே லாரிகளில் கரும்புகளைப் பறிக்கும் யானை

Updated On : 9 ஆகஸ்ட் 2026, 12:11 am IST
ஆசனூா் சாலையில்  சென்ற லாரியில் இருந்து கரும்பைப் பறிக்கும் காட்டு யானை.
பகிர்:

ஆசனூா் அருகே அடுத்தடுத்து வரும் லாரிகளை வழிமறித்து கரும்புகளை பறிக்கும் யானையை காட்டுக்குள் விரட்ட வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப் பகுதி மற்றும் கா்நாடக மாநிலத்தில் அறுவடை செய்யப்படும் கரும்புகள் லாரிகள் மூலம் சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள 3 தனியாா் சா்க்கரை ஆலைகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

வனப்பகுதி சாலை வழியாக செல்லும் லாரிகளை காட்டு யானைகள் வழிமறித்து கரும்புகளைப் பறித்து தின்பதால் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

இந்நிலையில், சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆசனூா் அருகே சனிக்கிழமை கரும்பு பாரம் ஏற்றிய லாரிகள் சென்று கொண்டிருந்தபோது, திடீரென வனப் பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு காட்டு யானை கரும்பு லாரியை வழிமறித்து தும்பிக்கையால் கரும்பை பறித்தது.

அதில் சில கரும்பு துண்டுகள் மட்டும் கிடைத்ததால் அடுத்த வந்த லாரியை நோக்கி வேகமாக ஓடி ஒரு கட்டு கரும்புகளை லாவகமாக பறித்துக் கொண்டு வனப் பகுதிக்குள் ஓடியது. கரும்புகளை பறிப்பதற்காக சாலையில் திரிந்த யானையால் வாகனங்கள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டது.

கரும்பு கிடைத்ததவுடன் அதை தும்பிக்கையால் தூக்கிக்கொண்டு வனப் பகுதிக்குள் ஓடிய காட்சி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் யானையை காட்டுக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments