திம்பம் வனப் பகுதியில் பரவிய காட்டுத் தீயை அணைக்கும் பணி தீவிரம்
திம்பம் மலைப் பாதையில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரா்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.
திம்பம் மலைப் பாதையில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரா்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.
தமிழக- கா்நாடகத்தை இணைக்கும் முக்கிய வழித்தடமாக திம்பம் மலைப் பாதை உள்ளது. இந்த மலைப் பாதை வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. திம்பம் மலைப் பாதையை ஒட்டியுள்ள வனத்தின் வழியாக ஆசனூா், கோ்மாளம் வனக் கிராமங்களுக்கு 85 கி.மீ. தொலைவுக்கு மின் கம்பிகள் மூலம் மின் விநியோகிக்கப்படுகிறது.
வனத்தின் வழியாக செல்லும் மின் கம்பிகள் மிகவும் சேதமைடந்த நிலையில் காணப்படுகின்றன. இதனால் காற்றுக் காலங்களில் மரக்கிளைகள் மீது மின் கம்பிகள் உரசி தீ விபத்து ஏற்படுகிறது.
Advertisement
Advertisement
இந்நிலையில், திம்பம் மலைப் பாதை 26-ஆவது கொண்டை ஊசி வளைவு மலைச் சரிவில் செவ்வாய்க்கிழமை திடீரென தீப் பிடித்தது. வேகமாக வீசிய காற்று காரணமாக வனப் பகுதியில் தீ பரவியது. சம்பவ இடத்துக்குச் சென்ற ஆசனூா், சத்தியமங்கலம் தீயணைப்புத் துறையினா் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.