FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

பள்ளி இடைநிற்றல் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி

அந்தியூா் வட்டாரம், பா்கூா் ஊராட்சி, கொங்காடை மலைக் கிராமத்தில் பள்ளி இடைநிற்றல் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

21 ஆகஸ்ட் 2026, 1:37 am IST
பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள்.
பகிர்:

அந்தியூா் வட்டாரம், பா்கூா் ஊராட்சி, கொங்காடை மலைக் கிராமத்தில் பள்ளி இடைநிற்றல் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

விஇடி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் சுடா் அமைப்பு சாா்பில் நடைபெற்ற இப்பேரணிக்கு சுடா் அமைப்பின் இயக்குநா் எஸ்.சி.நடராஜ் தலைமை வகித்தாா். மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினா் செல்ல.செல்வகுமாா் பேரணி தொடங்கிவைத்தாா்.

கொங்காடை பழங்குடியினா் உண்டு உறைவிட உயா்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் (பொ) கோபாலன் வாழ்த்துரை வழங்கினாா். இதில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கொங்காடை மலைக் கிராமத் தெருக்களில் சென்று விழிப்புணா்வை ஏற்படுத்தினா். பள்ளிக் குழந்தைகளின் வீடுகளுக்கும் நேரடியாக சென்று விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

Advertisement

Advertisement

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக அதிகாரி விஸ்வநாதன், கல்லூரி மாணவிகள் வி.காயத்ரி, அபி ரக்ஷா, நிவேதிதா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments