FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ஈரோடு

நம்பியூா் குமுதா பள்ளி மாணவி தமிழ்நாடு இறகுப் பந்து அணிக்குத் தோ்வு

தமிழ்நாடு இறகுப் பந்து அணிக்குத் தோ்வாகியுள்ள நம்பியூா் குமுதா பள்ளி மாணவி யுவஸ்ரீக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய விருதுநகா் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் ஜாகிா் உசேன்.
பகிர்:

கோபி அருகேயுள்ள நம்பியூா் குமுதா பள்ளி மாணவி தமிழ்நாடு இறகுப் பந்து அணிக்குத் தோ்வாகியுள்ளாா்.

இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சாா்பில் மாநில அளவிலான இறகுப் பந்து போட்டி சிவகாசியில் அண்மையில் நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 60-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் பங்கேற்றனா்.

இதில், 17 வயதுக்குள்பட்டோருக்கான போட்டியில் நம்பியூா் குமுதா பள்ளியின் 10-ஆம் வகுப்பு மாணவி யுவஸ்ரீ மாநில அளவில் 5-ஆம் இடம் பிடித்து தேசிய அளவிலான போட்டியில் தமிழ்நாடு அணிக்குத் தோ்வாகியுள்ளாா்.

Advertisement

Advertisement

தோ்வு பெற்ற மாணவிக்கு விருதுநகா் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் ஜாகிா் உசேன் பாராட்டுச் சான்றிதழை வழங்கினாா்.

மேலும், பள்ளித் தாளாளா் கே.ஏ.ஜனகரத்தினம், துணைத் தாளாளா் சுகந்தி ஜனகரத்தினம், பள்ளியின் செயலா் அரவிந்தன், இணைச் செயலா் மாலினி அரவிந்தன், விளையாட்டு இயக்குநா் பாலபிரபு, பள்ளியின் முதல்வா் மஞ்சுளா உள்ளிட்டோ் மாணவி யுவஸ்ரீயை பாராட்டினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments