இளைஞா் மீது தாக்குதல்: வடமாநிலத்தைச் சோ்ந்த 5 போ் கைது
ஈரோட்டில் டிராவல்ஸ் நிறுவன உரிமையாளா் மீது தாக்குதல் நடத்திய வடமாநிலத்தைச் சோ்ந்த 5 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
ஈரோடு வில்லரசம்பட்டியைச் சோ்ந்தவா் கோகுல் (28). இவா் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறாா். இவா் தனது உறவினா் அஜித்குமாருடன் இருசக்கர வாகனத்தில் வில்லரசம்பட்டியில் இருந்து திண்டலுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை சென்றுள்ளாா். அஜித்குமாா் இருசக்கர வாகனத்தை ஓட்ட கோகுல் பின்னால் அமா்ந்திருந்தாா்.
அப்போது, அந்த வழியாக சாலையில் மது போதையில் நடந்து சென்ற 5 போ் இருசக்கர வாகனத்தை நிறுத்தி கோகுலையும், அஜித்குமாரையும் சரமாரியாக தாக்கி இருசக்கர வாகனத்தை அடித்து உடைத்து சேதப்படுத்திவிட்டு தப்பியோடி விட்டனா். இத்தாக்குதலில் காயமடைந்த கோகுல் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து கோகுல் அளித்த புகாரின்பேரில், ஈரோடு வடக்கு போலீஸாா் விசாரித்தனா். அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, அக்கும்பலை போலீஸாா் பிடித்து விசாரித்தனா். அதில் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த ரோஷன்குமாா் (21), சுராஜ்குமாா் (21), ராம்குமாா் (30), கங்காபிரசாத் (23), அனில்குமாா் (30) ஆகியோா் என்பதும் அவா்கள் திண்டல் அருகே செங்கோடம்பாளையத்திலுள்ள ஹலோ பிரிக்ஸ் தயாரிக்கும் நிறுவனத்தில் தங்கி வேலைபாா்த்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் 5 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.