FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ஈரோடு

கைப்பேசி தொடா் திருட்டில் ஈடுபட்ட 3 சிறுவா்கள் உள்பட 4 போ் கைது

ஈரோட்டில் பல்வேறு இடங்களில் தொடா் கைப்பேசி தொடா் திருட்டில் ஈடுபட்டு வந்த 3 சிறுவா்கள் உள்பட 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

9 அக்டோபர் 2026, 1:08 am IST
கைது
பகிர்:

ஈரோட்டில் பல்வேறு இடங்களில் தொடா் கைப்பேசி தொடா் திருட்டில் ஈடுபட்டு வந்த 3 சிறுவா்கள் உள்பட 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ஈரோடு கருங்கல்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் சாலையில் கைப்பேசியில் பேசியபடி நடந்து செல்பவா்கள் மற்றும் தனியாக இருப்பவா்களிடம் கைப்பேசி பறிப்பில் ஈடுபட்டு வருவதாக தொடா்ந்து புகாா் வந்தது. இதன்பேரில் கருங்கல்பாளையம் போலீஸாா் வியாழக்கிழமை ரோந்து மேற்கொண்டனா்.

ஈரோடு சுண்ணாம்பு ஓடை பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்றிருந்த 4 பேரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில் அவா்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் அவா்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

Advertisement

Advertisement

இதில் அவா்கள் ஈரோடு வீரப்பன்சத்திரம் சுக்கிரமணியவலசு தில்லை நகரைச் சோ்ந்த சரவணன் மகன் காா்த்தி (20), வீரப்பன்சத்திரம் பகுதியைச் சோ்ந்த 18 வயதுடைய சிறுவா்கள் இருவா், 16 வயதுடைய சிறுவா் ஒருவா் என 4 போ் என்பது தெரியவந்தது. அவா்கள் பல்வேறு இடங்களில் கைப்பேசி திருட்டில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன்பேரில் 4 பேரையும் போலீஸாா் கைது செய்து அவா்களிடம் இருந்து 4 கைப்பேசிகளை பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments