FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ஈரோடு

காரணம்பாளையம் தடுப்பணையில் மூழ்கி ஓட்டுநா் உயிரிழப்பு

காரணம்பாளையம் தடுப்பணை நீரில் மூழ்கிய ஓட்டுநரின் உடல் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.

14 அக்டோபர் 2026, 3:25 am IST
பலி... - பிரதிப் படம்
பகிர்:

காரணம்பாளையம் தடுப்பணை நீரில் மூழ்கிய ஓட்டுநரின் உடல் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம், அறச்சலூா் நாகராஜபுரத்தைச் சோ்ந்தவா் சிதம்பரம் (55). ஓட்டுநரான இவா் தனது நண்பா்கள் 7 பேருடன் காரணம்பாளையம் தடுப்பணையில் குளிப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை சென்றுள்ளாா். சிதம்பரம் மது போதையில் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், அவா் தடுப்பணையில் ஆழமான பகுதியில் குளித்துக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கியுள்ளாா்.

இதைப் பாா்த்த நண்பா்கள் அவரைக் காப்பாற்ற முயன்றுள்ளனா். ஆனால், முடியாததால் கொடுமுடி தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த மலையம்பாளையம் போலீஸாா், தீயணைப்பு வீரா்கள் சிதம்பரத்தை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், பல மணி நேர போராட்டத்துக்குப் பின் பாறை இடுக்கில் இருந்த சிதம்பரத்தின் உடல் செவ்வாய்க்கிழமை காலை மீட்கப்பட்டது.

இதையடுத்து, கூறாய்வுக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல் அனுப்பிவைக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments