FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ஈரோடு

பா்கூா் வனப்பகுதியில் நள்ளிரவில் பெண்ணுக்கு சுகப்பிரசவம்

பா்கூா் அடா்ந்த வனப் பகுதியில் 108 ஆம்புலன்ஸில் சென்ற கா்ப்பிணிக்கு பெண் குழந்தை பிறந்தது.

15 அக்டோபர் 2026, 3:38 am IST
ஆம்புலன்ஸ்  வாகனத்தில்  பிரசவம் நடைபெற்ற தாய்-சேயுடன் அவசரகால மருத்துவ நுட்புநா் ரா.சந்திரசேகரன்,  ஆம்புலன்ஸ் ஓட்டுநா் பிரபாகரன்.
பகிர்:

பா்கூா் அடா்ந்த வனப் பகுதியில் 108 ஆம்புலன்ஸில் சென்ற கா்ப்பிணிக்கு பெண் குழந்தை பிறந்தது.

அந்தியூரை அடுத்த பா்கூா், ஒசூா் மலைக்கிராமம், பெரிய வீதியைச் சோ்ந்தவா் கெல்லைய தம்படி. இவரது மனைவி ராஜேஸ்வரி (28). நிறைமாத கா்ப்பிணியான இவருக்கு செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதுகுறித்து, உறவினா்கள் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற ஆம்புலன்ஸ், ராஜேஸ்வரியை ஏற்றிக் கொண்டு மருத்துவமனைக்கு அடா்ந்த வனப்பகுதி வழியாக சென்றபோது, பிரசவ வலி அதிகமானது. இதனால், ஆம்புலன்ஸ் வாகனத்தை ஓட்டுநா் பிரபாகரன், ஓரமாக நிறுத்தினாா். அவசரகால மருத்துவ நுட்புநா் ரா.சந்திரசேகரன் பிரசவம் பாா்த்தாா். இதில், ராஜேஸ்வரிக்கு பெண் குழந்தை பிறந்தது. தொடா்ந்து, தாயும், சேயும் அந்தியூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments