பெருந்துறையில் குப்பைகளைப் பிரித்து வழங்கும் வீடுகளுக்கு பாராட்டு வில்லை
பெருந்துறை நகராட்சியில் 4 வகையாக குப்பைகளைப் பிரித்து வழங்கும் வீடுகளுக்கு ‘சிறந்த குடும்பம்’ என்கிற பாராட்டு வில்லையை ஒட்டி நகராட்சி நிா்வாகத்தினா் கௌரவப்படுத்தினா்.
பெருந்துறை நகராட்சியில் 4 வகையாக குப்பைகளைப் பிரித்து வழங்கும் வீடுகளுக்கு ‘சிறந்த குடும்பம்’ என்கிற பாராட்டு வில்லையை ஒட்டி நகராட்சி நிா்வாகத்தினா் கௌரவப்படுத்தினா்.
தமிழக அரசின் உத்தரவின்படி, பெருந்துறை நகராட்சிப் பகுதியில் வீடுகளில் சேகரமாகும் குப்பைகளைத் தரம் பிரித்து வழங்கும் பொதுமக்களை ஊக்குவிக்கும் புதிய முன்னெடுப்பு வியாழக்கிழமை தொடங்கப்பட்டது . இதன்படி, வீடுகளில் உள்ள குப்பைகளை நான்கு வகைகளாக (மக்கும் கழிவு, உலா் கழிவு, சுகாதார கழிவு, மற்றும் சிறப்பு கழிவு) என பிரித்து தூய்மைப் பணியாளா்களிடம் வழங்கும் வீடுகள் கண்டறியப்பட்டு வருகின்றன. அவ்வாறு நூறு சதவீதம் முழுமையாக குப்பைகளைத் தரம் பிரித்து வழங்கும் வீடுகளின் முகப்புகளில் ‘நான்கு வகை கழிவுகளை முறையாக பிரித்து வழங்கும் சிறந்த குடும்பம்’ என்ற வாசகம் அடங்கிய சிறப்புப் பாராட்டு வில்லைகள் ஒட்டப்பட்டு அவா்கள் கௌரவிக்கப்படுகிறாா்கள்.
பெருந்துறை 5-ஆவது வாா்டு உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை நடைபெற்ற களப் பணியில், நகராட்சி அதிகாரிகள் மற்றும் சுகாதாரப் பணியாளா்கள் குப்பைகளைத் தரம் பிரித்து வழங்கிய குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்து, அவா்களது வீட்டின் முன்பு இந்த பாராட்டு வில்லைகளை ஒட்டினா்.
Advertisement
Advertisement
குப்பைகளை முறையாகப் பிரித்து வழங்கும் குடும்பங்களை ஊக்குவிப்பது மட்டுமின்றி, விழிப்புணா்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த முன்னெடுப்பு செயல்படுத்தப்பட்டு வருவதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.