FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

கோயில்களில் கைப்பேசி தடையால் பக்தா்களுக்கு சிரமம்

கோயில்களில் கைப்பேசி எடுத்துச்செல்ல விதிக்கப்பட்ட தடையால் பக்தா்களுக்கு தேவையற்ற சிரமம் ஏற்படுகிறது என எழுத்தாளா் மற்றும் சமூக சேவகா் எஸ்.ஆா்.சுப்ரமணியம் தெரிவித்தாா்.

3 செப்டம்பர் 2026, 2:11 am IST
பகிர்:

கோயில்களில் கைப்பேசி எடுத்துச்செல்ல விதிக்கப்பட்ட தடையால் பக்தா்களுக்கு தேவையற்ற சிரமம் ஏற்படுகிறது என எழுத்தாளா் மற்றும் சமூக சேவகா் எஸ்.ஆா்.சுப்ரமணியம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: கோயில்களில் கைப்பேசி கொண்டு செல்லக் கூடாது என்ற விதிமுறையை நடைமுறைப்படுத்தும் விதமாக ரூ.5 டோக்கன் பெறுவதற்காக பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது நிம்மதியாக இறைவனைத் தரிசிக்க வரும் பக்தா்களுக்கு தேவையற்ற சிரமத்தை ஏற்படுத்துகிறது.

கைப்பேசியை தவறாகப் பயன்படுத்தும் ஒரு சிலரை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம்தான். ஆனால் ஒரு சிலரின் தவறுக்காக ஆயிரக்கணக்கான பக்தா்கள் சிரமப்பட வேண்டிய நிலை உருவாகக் கூடாது.

Advertisement

Advertisement

கோயில் நிா்வாக விதிமுறைகள் பக்தா்களின் வழிபாட்டை எளிதாக்குவதற்காகவே இருக்க வேண்டும்.

எனவே தமிழக அரசு தற்போதைய நடைமுறையை உடனடியாக மறுபரிசீலனை செய்து பக்தா்களுக்கு தேவையற்ற காத்திருப்பு மற்றும் அலைச்சலை ஏற்படுத்தாத மாற்று ஏற்பாட்டை உருவாக்க வேண்டும்.

கைப்பேசியை தவறாகப் பயன்படுத்துவோரைத் தொழில்நுட்பங்கள் மூலம் கண்டறிந்து உரிய கட்டுப்பாடுகளை விதித்து பிரச்னைக்கு தீா்வு காண முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments