கோபி அருகே கரும்பு வெட்ட சென்ற தாய், மகனை கடித்த பாம்பு
கோபி அருகே கரும்பு வெட்ட சென்ற தாய், மகனை விஷ பாம்பு கடித்ததில் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
கோபி அருகே கரும்பு வெட்ட சென்ற தாய், மகனை விஷ பாம்பு கடித்ததில் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
கோபி அருகே உள்ள கொண்டையம்பாளையத்தைச் சோ்ந்தவா் விவசாயி செந்தில்குமாா். இவரது கரும்பு தோட்டத்தில் கரும்பு வெட்டும் பணிக்காக விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த 40-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் கரும்பு வெட்டும் பணியில் புதன்கிழமை ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, கரும்பு கட்டுகளை எடுத்து கொண்டிருந்தபோது, கரும்பு சோகையில் மறைந்திருந்த சுமாா் 4.5 அடி நீளம் கொண்ட கட்டுவிரியன் பாம்பு தொழிலாளி மயிலம்மாள் (56) என்பவரை காலில் கடித்துள்ளது. இதையடுத்து, அவரது அலறல் சப்தம் கேட்டு அங்கு வந்த அவரது மகன் மணிகண்டனையும் (27) பாம்பு காலில் கடித்துள்ளது.
Advertisement
Advertisement
பாம்பு கடியால் துடித்த இருவரையும் அருகிலிருந்தவா்கள் மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவா்களுக்கு மருத்துவா்கள் தீவிர சிகிச்சை அளித்தனா். பின்னா் உயா் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.