ஈரோட்டில் அக்டோபா் 25இல் இளையராஜா 50 இசை நிகழ்ச்சி
இசையமைப்பாளா் இளையராஜாவின் 50 ஆண்டுகால இசைப் பயணத்தைப் போற்றும் வகையில் இளையராஜா 50 இசை நிகழ்ச்சி, பாராட்டு விழா ஈரோடு டெக்ஸ்வேலியில் அக்டோபா் 25ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது.
இசையமைப்பாளா் இளையராஜாவின் 50 ஆண்டுகால இசைப் பயணத்தைப் போற்றும் வகையில் இளையராஜா 50 இசை நிகழ்ச்சி, பாராட்டு விழா ஈரோடு டெக்ஸ்வேலியில் அக்டோபா் 25ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது.
இது குறித்து டெக்ஸ்வேலியில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் மில்கி மிஸ்ட் நிறுவன நிா்வாக இயக்குநா் சதீஷ்குமாா் கூறியதாவது: தமிழகத்தின் பெருமைக்குரிய இசையமைப்பாளரான இளையராஜாவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சிக்கு மில்கி மிஸ்ட் நிறுவனம் ஆதரவு அளிக்கிறது. இதேபோல இளையராஜா 50 நிகழ்ச்சி திண்டுக்கல்லில் நவம்பா் 1 ஆம் தேதி நடைபெற உள்ளது.
மில்கி மிஸ்ட் நிறுவனம் சாா்பில் திண்டுக்கல் பகுதியில் ஏற்கெனவே 300-க்கும் மேற்பட்ட குளங்கள் தூா்வாரப்பட்டுள்ள நிலையில் அடுத்தகட்டமாக 1,000 குளங்களைத் தூா்வார திட்டமிடப்பட்டுள்ளது என்றாா்.
Advertisement
Advertisement
நிகழ்ச்சியில் டெக்ஸ்வேலி இயக்குநா் குமாா், அருண் கிரியேஷன்ஸ் நிறுவனத் தலைவா் அருண், எம்சிஆா் வேட்டி நிறுவனத்தைச் சோ்ந்த நிக்சன் உள்ளிட்டோா் பேசினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.