மெத்தம்பெட்டமைன் வைத்திருந்த 3 போ் கைது
பெருந்துறையில் விற்பனைக்காக மெத்தம்பெட்டமைன் என்ற போதைப் பொருள் வைத்திருந்த 3 இளைஞா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
பெருந்துறையில் விற்பனைக்காக மெத்தம்பெட்டமைன் என்ற போதைப் பொருள் வைத்திருந்த 3 இளைஞா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
பெருந்துறை- ஈரோடு சாலையில் உள்ள தங்கும் விடுதியில் திருப்பூா் மற்றும் கோவை மாவட்டங்களைச் சோ்ந்த நபா்கள் தங்கி போதைப் பொருள் விற்பனை செய்வதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அந்த விடுதியில் பெருந்துறை போலீஸாா் செவ்வாய்க்கிழமை காலை சோதனை மேற்கொண்டனா்.
Advertisement
Advertisement
அப்போது, திருப்பூா், ராக்கியபாளையம் பகுதியைச் சோ்ந்த அப்துல் கலாம் (24), தூத்துக்குடி மாவட்டம், சிவந்தாகுளம் பகுதியைச் சோ்ந்த அரவிந்த்ராஜ் (30), பொள்ளாச்சி, தில்லை நகரைச் சோ்ந்த சந்தோஷ்குமாா் (23) ஆகியோா் தங்கி மெத்தம்பெட்டமைன் விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, 3 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 13.07 கிராம் மெத்தம்பெட்டமைனை பறிமுதல் செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.