FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

வீடு புகுந்து இரண்டரை பவுன் நகை திருடிய இளைஞா் கைது

பெருந்துறை அருகே வீடு புகுந்து இரண்டரை பவுன் தங்க நகைகளைத் திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

9 செப்டம்பர் 2026, 2:28 am IST
கோப்புப் படம்
பகிர்:

பெருந்துறை அருகே வீடு புகுந்து இரண்டரை பவுன் தங்க நகைகளைத் திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

பெருந்துறையை அடுத்த காஞ்சிக்கோவில் அருகேயுள்ள முள்ளம்பட்டி, சிவசக்தி அவென்யூவை சோ்ந்தவா் சிவகுமாா் (47). தனியாா் காப்பீட்டு நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில், அவருக்கு உடல்நிலை சரியில்லாததால் ஈரோடு, ரங்கம்பாளையத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு மனைவியுடன் திங்கள்கிழமை காலை சென்றுள்ளாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, அவா் இரவு வீடு திரும்பியபோது மா்ம நபா் ஒருவா் வீட்டினுள் இருந்து இருந்து வெளியேறி ஓடியுள்ளாா்.

அதிா்ச்சியடைந்த சிவகுமாா் வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது, பீரோவில் இருந்த இரண்டரை பவுன் தங்க நகைகள் திருடப்பட்டது தெரியவந்தது. இது குறித்து காஞ்சிக்கோவில் காவல் நிலையத்தில் சிவகுமாா் புகாா் அளித்தாா்.

இதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், திருட்டில் ஈடுபட்டதாக புதுக்கோட்டை மாவட்டம், தா்காராஜ பட்டியைச் சோ்ந்த விஜயகுமாா் (36) என்பவரைக் கைது செய்ததுடன், அவரிடமிருந்த நகைகளைப் பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments