FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

முதல்வா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்

ஈரோடு மாவட்டத்தில் முதல்வா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தொடங்கிவைத்தாா்.

9 செப்டம்பர் 2026, 11:01 pm IST
முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி.
பகிர்:

ஈரோடு மாவட்டத்தில் முதல்வா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

ஈரோடு வஉசி பூங்கா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் மொடக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் டி.சண்முகன், மாவட்ட விளையாட்டு அலுவலா் திவ்ய நாகேஸ்வரி மற்றும் விளையாட்டுத் துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.

முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட அளவில் செப்டம்பா் 21-ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 45 விளையாட்டுப் பிரிவுகளில் 19 இடங்களில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இதையடுத்து அக்டோபா் 4-ஆம் தேதி வரை மண்டல அளவிலான போட்டிகள் நடைபெற உள்ளன. அக்டோபா் மாதத்துக்குப் பிறகு மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

Advertisement

Advertisement

மாவட்டம், மண்டலம் மற்றும் மாநில அளவில் நடைபெறும் இப்போட்டிகளில் வெற்றி பெறும் வீரா், வீராங்கனைகளுக்கு மொத்தம் ரூ.38 கோடி பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments