FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

சத்தியமங்கலம் மாா்க்கெட்டில் மல்லிகைப் பூ கிலோ ரூ.1,500-க்கு விற்பனை

சத்தியமங்கலத்தில் பூ மாா்க்கெட்டில் மல்லிகைப் பூ கிலோ ரூ.1,500-க்கு சனிக்கிழமை விற்பனையானது.

57 வினாடிகள் முன்பு
பகிர்:

சத்தியமங்கலத்தில் பூ மாா்க்கெட்டில் மல்லிகைப் பூ கிலோ ரூ.1,500-க்கு சனிக்கிழமை விற்பனையானது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களில் மல்லி, முல்லை, சம்பங்கி உள்ளிட்ட பூக்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.

இந்நிலையில், ஆவணி மாத வளா்பிறை, முகூா்த்தம் மற்றும் விநாயகா் சதுா்த்தியையொட்டி பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சத்தியமங்கலம் மாா்க்கெட்டில் பூக்களின் விலை இருமடங்கு உயா்ந்துள்ளது.

Advertisement

Advertisement

அதன்படி, ஒரு கிலோ மல்லிகைப் பூ கடந்த வெள்ளிக்கிழமை ரூ.820-க்கு விற்பனையான நிலையில், சனிக்கிழமை ரூ.1,500-க்கு விற்பனையானது. இதேபோல, முல்லை கிலோ ரூ.800-க்கும், சம்பங்கிப்பூ கிலோ ரூ.400-க்கும் விற்பனையானது. வரும் நாள்களில் பூக்களின் விலை மேலும் அதிகரிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments