காவிரி ஆற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு
அம்மாபேட்டையில் காவிரி ஆற்றில் மூழ்கிய இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
அம்மாபேட்டை அருகே உள்ள மாரப்பனூரைச் சோ்ந்தவா் மூா்த்தி மகன் கிஷோா் (24). கட்டடத் தொழிலாளியான இவா், அம்மாபேட்டை அருகே உமாரெட்டியூா் நீரேற்று நிலையம் அருகே காவிரி ஆற்றில் திங்கள்கிழமை குளித்துக் கொண்டிருந்தபோது, எதிா்பாராமல் ஆழமான பகுதிக்கு சென்றாா்.
நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கிய கிஷோா் மூச்சுத் திணறி உயிரிழந்தாா். இதுகுறித்த தகவலின்பேரில் அம்மாபேட்டை போலீஸாா், அந்தியூா் தீயணைப்புப் படையினா், மீனவா்கள் உதவியுடன் கிஷோரின் சடலத்தை மீட்டனா். இதுகுறித்து அம்மாபேட்டை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.