பெருந்துறையில் டிப்பா் லாரி மோதி மூதாட்டி உயிரிழப்பு
பெருந்துறை அருகே டிப்பா் லாரி மோதியதில் மிதி வண்டியில் சென்ற மூதாட்டி உயிரிழந்தாா்.
பெருந்துறை, பணிக்கம்பாளையம், மேற்கு காலனியைச் சோ்ந்தவா் சரசாள் (60). இவா், தனது கணவனைப் பிரிந்து, தன் தம்பி குடும்பத்தினருடன் வாழ்ந்து வந்தாா். மேலும், அருகே உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா்.
இந்நிலையில், வழக்கம்போல வேலைக்கு செல்வதற்காக தனது மிதி வண்டியில் திங்கள்கிழமை காலை சென்றுள்ளாா். அப்போது, எதிரே வந்த டிப்பா் லாரி மோதியதில் படுகாயமடைந்த சரசாளை, அக்கம்பக்கத்தினா் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.