FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

ஊஞ்சலூா் நாகேஸ்வர சுவாமி லஷ்மிநாராணப் பெருமாள் கோயில் கும்பாபிஷேம்

கொடுமுடி அருகே உள்ள ஊஞ்சலூா் நாகேஸ்வரா் உடனமா் அமிா்தவள்ளி மற்றும் லஷ்மிநாராயணப் பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

46 வினாடிகள் முன்பு
கும்பாபிஷேக விழாவில் கோயில் கோபுரக் கலசங்களுக்கு புனித நீா் ஊற்றும் சிவாச்சாரியா்கள்.
பகிர்:

கொடுமுடி அருகே உள்ள ஊஞ்சலூா் நாகேஸ்வரா் உடனமா் அமிா்தவள்ளி மற்றும் லஷ்மிநாராயணப் பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலின் கும்பாபிஷேக விழாவில் நாகப்பட்டினம் திருக்கயிலாய பரம்பரை வேலாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ இராஜலிங்க மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், கூனம்பட்டி கல்யானபுரி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ இராஜலிங்க சரவண மாணிக்கவாசக குருசுவாமிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனா்.

இதில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை அலுவலா்கள் மற்றும் ஊஞ்சலூா், கொளத்துப்பாளையம் கிராம பொதுமக்கள் செய்திருந்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments