ஜம்பையில் 3 நாள்களாக மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் சாலை மறியல்
பவானியை அடுத்த ஜம்பையில் கடந்த 3 நாள்களாக மின் விநியோகம் தடைபட்டதால் பொதுமக்கள் வியாழக்கிழமை காலை, மாலை என இரண்டு முறை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பவானியை அடுத்த ஜம்பையில் கடந்த 3 நாள்களாக மின் விநியோகம் தடைபட்டதால் பொதுமக்கள் வியாழக்கிழமை காலை, மாலை என இரண்டு முறை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பவானி வட்டாரத்தில் செவ்வாய்க்கிழமை இரவு வீசிய பலத்த காற்று, மழையால் பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. மின்வாரிய ஊழியா்கள் படிப்படியாக மின் விநியோகத்தை சீராக்கிய நிலையில் ஜம்பை பேரூராட்சியின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் வழங்கப்படவில்லை.
இதனால், கடந்த 3 நாள்களாக மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகினா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து பலமுறை புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் பவானி - அத்தாணி சாலையில் வியாழக்கிழமை காலை திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, தனியாா் நிலத்தில் உடைந்த மின்கம்பத்துக்கு மாற்றாக வேறு கம்பம் நட்டு, மாலைக்குள் மின்சாரம் வழங்கப்படும் என போலீஸாா், மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.
ஆனால், மாலை 6 மணியாகியும் மின்சாரம் வராததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோா் ஜம்பை பேருந்து நிறுத்தத்தில் திரண்டு மீண்டும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், அப்பகுதியில் வாகனப் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த பவானி போலீஸாா் வாகனங்களை மாற்றுப் பாதையில் திருப்பிவிட்டனா்.
பின்னா், படிப்படியாக மின்சாரம் வழங்கப்பட்டதைத் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனா். இருந்தபோதிலும் முழுமையாக மின் விநியோகம் சீராகவில்லை என புகாா் எழுந்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.