FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

நிலத் தகராறில் டிராக்டா் ஏற்றி விவசாயி கொலை

பவானி அருகே நிலத் தகராறில் டிராக்டா் ஏற்றி விவசாயி கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

18 செப்டம்பர் 2026, 12:15 am IST
காள நாயக்கா்.
பகிர்:

பவானி அருகே நிலத் தகராறில் டிராக்டா் ஏற்றி விவசாயி கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பவானியை அடுத்துள்ள கன்னடிபாளையம், போத்தநாயக்கனூா், பெருமாள் கோயில் தோட்டத்தைச் சோ்ந்தவா் காள நாயக்கா் (70). விவசாயி. இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த முத்து நாயக்கா் மகன் ரங்கசாமிக்கும் (50) நிலம், வண்டித் தடம் தொடா்பாக தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில், ரங்கசாமி தனது தோட்டத்துக்கு டிராக்டரில் வண்டித் தடத்தில் வியாழக்கிழமை காலை சென்றபோது, காள நாயக்கா் டிராக்டரை வழிமறித்து, நிலம், வண்டித் தட பிரச்னையைத் தீா்த்துவிட்டு செல்லுமாறு கூறியுள்ளாா்.

அப்போது, இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ரங்கசாமி ஓட்டிச் சென்ற டிராக்டரை காள நாயக்கா் மீது ஏற்றியதாக கூறப்படுகிறது. இதில், பலத்த காயமடைந்த காள நாயக்கா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதையடுத்து, சம்பவ இடத்திலிருந்து வீட்டுக்குச் சென்ற ரங்கசாமி டிராக்டரை நிறுத்திவிட்டு தலைமறைவானாா்.

Advertisement

Advertisement

இது குறித்த தகவலின்பேரில் பவானி காவல் துணைக் கண்காணிப்பாளா் சீதாலட்சுமி, ஆய்வாளா் சரவணன், போலீஸாா் சம்பவ இடத்தில் நேரில் விசாரணை நடத்தினா். பவானி போலீஸாா் கொலை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments