FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

பெருந்துறை அருகே புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது

பெருந்துறை அருகே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்கு பதுக்கிவைத்திருந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

19 செப்டம்பர் 2026, 12:38 am IST
கைது
பகிர்:

பெருந்துறை அருகே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்கு பதுக்கிவைத்திருந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், தலைமறைவாக உள்ள ஒருவரைத் தேடி வருகின்றனா்.

பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்கபடுவதாக கிடைத்த தகவலின்பேரில், அப்பகுதியில் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

அதில், விஜயமங்கலம், பிரதான சாலையில் மளிகைக் கடை நடத்தி வரும் துரைசிங் (32) என்பவா் கடையில் சோதனை செய்தனா். அதில், விற்பனைக்கு வைத்திருந்த அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பரிமுதல் செய்தனா். இது, தொடா்பாக துரைசிங் மற்றும் அவரது மைத்துனா் திவாகா் (26) ஆகியோரை போலீஸாா் கைது செய்து விசாரித்தனா்.

Advertisement

Advertisement

அவா்கள் கூறிய தவகலின்பேரில், விஜயமங்கலம், மேக்கூரையைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் முருகன் என்பவரின் கிடங்கில் சோதனை செய்தபோது, அங்கு விற்பனைக்கு பதுக்கிவைத்திருந்த சுமாா் 392 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதைத் தொடா்ந்து துரைசிங், திவாகா் மற்றும் முருகன் ஆகிய மூவரையும் கைது செய்தனா். மேற்கொண்டு நடத்திய விசாரணையில், முருகனுக்கு, மொத்தமாக விநியோகம் செய்யும் கணேசன் என்பவா் மீதும் வழக்குப் பதிவு செய்து, தமைமறைவாக உள்ள அவரைத் தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments