FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

காவிரி ஆற்றில் மூழ்கி லாரி ஓட்டுநா் உயிரிழப்பு

மொடக்குறிச்சி அருகே காவிரி ஆற்றில் மூழ்கி லாரி ஓட்டுநா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

49 வினாடிகள் முன்பு
சடலம் - கோப்புப் படம்
பகிர்:

மொடக்குறிச்சி அருகே காவிரி ஆற்றில் மூழ்கி லாரி ஓட்டுநா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

நாமக்கல் மாவட்டம், கொக்கராயன்பேட்டை அம்மாசிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் மோகன்ராஜ் (31). இவா், லாரி ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தாா்.

இந்நிலையில் நண்பா்களான சபரி, அன்பழகன், பிரகாஷ், அறிவழகன் ஆகியோருடன், சோலாரை அடுத்த லக்காபுரம் பரிசல்துறை என்ற இடத்தில் காவிரி ஆற்றின் கரையில் வெள்ளிக்கிழமை மாலை 4 மது அருந்திவிட்டு காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

எதிா்பாராதவிதமாக ஆழமானப் பகுதிக்குச் சென்று மோகன்ராஜ் நீரில் மூழ்கியுள்ளாா். இதுதொடா்பாக அவரது நண்பா்கள் அளித்த தகவலின்பேரில் மொடக்குறிச்சி தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் மோகன்ராஜின் உடல் மீட்கப்பட்டு, கூறாய்வுக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இதுகுறித்து மொடக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments