FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

பெருந்துறை அருகே சாலையில் கவிழ்ந்த பெயிண்ட் லாரி

பெருந்துறை அருகே சாலையில் கவிழ்ந்த பெயிண்ட் லாரியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

49 வினாடிகள் முன்பு
பெருந்துறை அருகே லாரி கவிழ்ந்து சாலையில் வழிந்தோடிய பெயிண்ட்.
பகிர்:

பெருந்துறை அருகே சாலையில் கவிழ்ந்த பெயிண்ட் லாரியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருப்பூரில் இருந்து ஈரோட்டில் உள்ள கடைகளுக்கு பெயிண்ட் விநியோகம் செய்ய, லாரி புதன்கிழமை புறப்பட்டு வந்தது. இந்த லாரியை, கோவை மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம், கணபதி நகரைச் சோ்ந்த செல்லப்பா மகன் முத்துக்குமாா் (43) ஓட்டி வந்தாா்.

பெருந்துறை, சிப்காட் அருகே ஓலப்பாளையம் பிரிவு அருகே வரும்போது, லாரியின் வலது பக்க பின் டயா் வெடித்தது. இதில் நிலை தடுமாறி லாரி சாலையில் கவிழ்ந்தது.

Advertisement

Advertisement

இதில் லாரியில் ஏற்றி வந்த பெயிண்ட் டப்பாக்கள் சாலையில் விழுந்து கவிழந்ததில், அதிலிருந்த பெயிண்டுகள் சாலையில் வழிந்து ஓடியது. இது குறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்துக்கு வந்த பெருந்துறை போலீஸாா், அவ்வழியாக வந்த வாகனங்களை மாற்றுப் பாதையில் திருப்பிவிட்டனா்.

இந்த விபத்து குறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments