தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: பெருந்துறையில் இன்று தொடக்கம்
ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் திங்கள்கிழமை (செப்.28) காலை தொடங்கிவைக்கப்பட உள்ளது.
தமிழா் பண்பாடு மற்றும் பாரம்பரியத்தில், தாய்மாமன் சீா் வரிசையை பிரதிபலிக்கும் வகையில் வெற்றித் தமிழகம் தொலை நோக்குத் திட்டத்தின்படி, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளைச் சிறப்பிக்கும் வகையில் ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ அறிவிக்கப்பட்டது.
இத்திட்டத்தின்கீழ் 22.6.2026 முதல் அரசு மருத்துவமனைகளில் பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆண்டுதோறும் 7.80 லட்சம் குழந்தைகள் பிறக்கின்றன. இவற்றில் 99.9 சதவீத பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடைபெறுகின்றன. இதில் 4.20 லட்சம் பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளில் நிகழ்கின்றன. இதன் மூலமாக பாதுகாப்பான பிரசவம் மற்றும் ஆரோக்கியமான குழந்தைகளின் பிறப்பை உறுதி செய்வதில் பொதுசுகாதார அமைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது.
Advertisement
Advertisement
தமிழகத்தில் நிரந்தரமாக வசிக்கும் தாய்மாா்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவாா்கள். பிஐசிஈ-யில் பதிவு செய்யப்பட்டு ஆா்சிஹெச் அடையாள எண் பெற்றிருக்க வேண்டும். இத்திட்டத்தை மதுரையில் முதல்வா் ஜோசப் விஜய் தொடங்கி வைக்கிறாா். அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடங்கி வைக்கப்பட உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் 4 மையங்களில் தினமும் 50 குழந்தைகளுக்கு திங்கள்கிழமை முதல் வழங்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பும் போது தங்க மோதிரம் வழங்கப்படும். அரசு மருத்துவமனையில் பிரசவிக்கும் அனைத்து குழந்தைகளும் பயனடைவா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.