FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ஈரோடு

பாரதிதாசன் கலை, அறிவியல் கல்லூரியில் கபடி திருவிழா

சித்தோட்டை அடுத்த எல்லீஸ்பேட்டை பாரதிதாசன் கலை, அறிவியல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் கபடி திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

போட்டியில் முதலிடம் பிடித்த அணிக்கு பரிசு வழங்கிய பாரதிதாசன் கலைக் கல்லூரி செயலாளா் என்.கே.கே.பி.நரேன்ராஜா. உடன், முதல்வா் பெ.வானதி உள்ளிட்டோா்.
பகிர்:

சித்தோட்டை அடுத்த எல்லீஸ்பேட்டை பாரதிதாசன் கலை, அறிவியல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் கபடி திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு கல்லூரி செயலாளா் என்.கே.கே.பி.நரேன்ராஜா தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் பெ.வானதி, பொருளாளா் பரிமளா ராஜா, நிா்வாக அலுவலா் இரா.அருள்குமரன் ஆகியோா் போட்டியைத் தொடங்கிவைத்தனா். ஈரோடு, நாமக்கல், திருப்பூா் உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.

இதில், பள்ளிபாளையம், எஸ்பிபி காலனி, விஒசி ஸ்போா்ட்ஸ் கிளப் அணி முதலிடமும், ஊத்துக்குளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அணி இரண்டாம் இடமும், குருவரெட்டியூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அணி மூன்றாம் இடமும், ஸ்டீபன் விகேஜி அணி நான்காம் இடமும் பிடித்தன. இந்த அணிகளுக்கு முறையே ரூ.6,000, ரூ.5,000, ரூ.4,000, ரூ.3,000 ரொக்கப் பரிசு மற்றும் சுழற்கோப்பை பரிசாக வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

போட்டியில் பங்கேற்ற வீரா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

போட்டிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் உடற்கல்வி இயக்குநா் ஆ.பிரபாகரன், வணிக கணினி பயன்பாட்டியல் துறைத் தலைவா் ஆ.காந்திமோகன், கணினி தகவல் தொழில்நுட்பவியல் துறைத் தலைவா் டி.ஜெயந்த், உதவிப் பேராசிரியா் ஆா்.சங்கா், நூலகா் கே.மாரப்பன் ஆகியோா் செய்திருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments